ஆத்தூர் அருகே உறவினர்களுடன் காட்டுக்குள் இரவில் வேட்டையாடச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் அந்தோணிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதில் குணசேகரன் என்ற மகன் இருக்கிறார். அவர் இரவு நேரங்களில் காட்டுப் பகுதிக்குச் சென்று காட்டுப்பன்றி மற்றும் முயல் போன்றவற்றின் வேட்டையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார் என்பவரின் விவசாய நிலத்தில் சுற்றி போடப்பட்டிருந்த விண்வெளியில் குணசேகரன் சிக்கியுள்ளார்.
அதனால் அலறிய குணசேகரனை மீட்ட உறவினர்கள் அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குணசேகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு அவரின் உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அவரின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், குலசேகரன் உறவினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் விசாரணையில் குணசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் பொய் கூறியுள்ளனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில்,குணசேகரன் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.