Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இரவில் வேட்டையாடும் சிறுத்தைகள்” அச்சத்தில் உறைந்த பொது மக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சிறுத்தை கடித்து இறந்த ஆடுகளுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின்  அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை பிடித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை  கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான  3  ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆடுகள் சம்பவ இடடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள்  கூறியதாவது. நாங்கள் வளர்த்து வரும் ஆடு, கோழிகளை சிறுத்தை பிடித்து செல்கிறது. இதுகுறித்து  வனத்துறையினரிடம் பலமுறை கூறி விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து  சிறுத்தை வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளான ஆடு, கோழி ஆகியவற்றை கடித்து  விடுகிறது. இதனால்  இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். எனவே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் இறந்த ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |