Categories
லைப் ஸ்டைல்

“இரவு நேரத்தில் செல்போன் யூஸ் பண்றீங்களா”…? இனிமே பண்ணாதீங்க… புற்றுநோய் வருமா…!!

இரவில் செல்போன்  பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.

மொபைல்போன் இல்லாமல் சிலர் தூங்குவதே கிடையாது. படுக்கைக்கு செல்லும் போதும் கூட மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஈமெயில் என்று ஓய்வில்லாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன . இதனால் கண்களுக்கு பாதிப்பை தருகின்றது. நிம்மதியான உறக்கத்திற்கு நீங்கள் செல்போனை பயன்படுத்த கூடாது. மேலும் இரவில் மொபைல் போனில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் கூர்மையாக இருக்கும்.இவை மட்டுமல்ல தூக்கத்தையும் பாதிக்கும்.

இரவு நேரங்களில் மொபைல் பார்ப்பதால் எந்த மாதிரியான ஆபத்துகள் உருவாகிறது என்பதை பார்ப்போம்.

தொடர்ந்து இரவில் மொபைல் போன் பார்க்கும்போது உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும்.

மொபைல் போனில் வெளிப்படும் நீல நிற ஒளி கதிர்கள் கண்களின் மீது படும்போது ரெட்டினா பகுதியை பாதிக்கும்.

தூங்க வேண்டிய சமயத்தில் தூங்காமல் இருப்பது தலைவலி, சோர்வு, மன குழப்பம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சில வகை புற்று நோயுடன் தொடர்புடைய மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதால் மனிதர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயமும் ஏற்படுகின்றது.

செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகள் மூளையை பாதிக்கும்.

இருட்டான அறையில் அல்லது இருட்டான சுற்றுப் புறங்களில் மொபைல் போனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்கள் கண்களுக்கு வலியையும் சோர்வையும் கொடுக்கிறது.

இதனால் கண் பார்வையை இழக்க கூடிய பிரச்சனையும் ஏற்படும்.

Categories

Tech |