Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கில் இதற்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கின் போது பொது, தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி. பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்பட அனுமதி. பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் அனுமதி. ஐடி நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |