Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு, ஏப்-30 வரை அனைத்து பள்ளிகளும் மூடல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தினசரி பாதிப்பு 100 என்ற எண்ணிக்கையில் பதிவானாலோ அல்லது 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தாலோ அந்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் ஏப்ரல் 30 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |