Categories
மாநில செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. புறநகரில் பாதுகாப்பு தீவிரம்…. காவல்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அமலாக இருப்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். புறநகரில் 36 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு நடத்தப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |