Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு மேலும் நீட்டிப்பு…. 9-12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு கோவிட்-19 தடுப்பு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வழக்கம் போல் திறந்திருக்கும்.

இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மறு உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறையத் தொடங்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை காரணமாக அரசாங்கம் தனது அலுவலகங்களை வாரத்தில் 5 நாட்கள் மற்றும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே வேலை செய்ய அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊனமுற்ற பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் பிப்ரவரி 3 நாளை முதல் கல்வி நிறுவனங்கள், 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. மேலும் பிப்ரவரி 3 நாளை முதல் பயிற்சி வகுப்புகள், நூலகங்கள், ஜிம்கள் மற்றும் கிளப்களை மீண்டும் திறக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து கடைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |