Categories
தேசிய செய்திகள்

இரவு நேர பார்ட்டிகளால் நேரிடும் விபத்துக்கள்… தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மது போதையில் சொகுசு காரை ஓட்டிவந்த ஓட்டுநர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ நகரங்களில் பார்ட்டிக்கு செல்பவர்கள், மது போதையில் இரவு வேகமாக வாகனங்களை ஓட்டி வருவதன் காரணமாக இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது. இதனால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |