Categories
தேசிய செய்திகள்

இரவு நேர விபத்து பட்டியல்….. புதுச்சேரி முதலிடம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களை தேசிய குற்ற பதிவேடு அமைப்பு பதிவு செய்த ஆவணப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்து தரவுகளை கொண்டு இரவில் 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் அடங்கிய பட்டியலை ஸ்டேட்டஸ் ஆப் இந்தியா நிறுமம் டுடே நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இரவில் அதிக விபத்துக்கள் நடக்கும் தேசிய அளவிலான பட்டியலில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது.அதாவது இந்த பட்டியலில் 23.5% புதுச்சேரி மாநில முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்தாக, உத்தரபிரதேசம் 20.2%, 3 வது டில்லி 20.1 % , 4 வது  ஜார்கண்ட் 17.3%, 5 வது பீகார் 16.7% இடத்தில் உள்ளன.

தமிழகத்தில் இரவில் 6.1% சாலை விபத்துகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால் லட்சத்தீவில் மட்டும் இரவில் ஒரு விபத்தும் நடக்கவில்லை. இந்தியாவில் 60% சாலை விபத்துக்கள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் தான் நடந்துள்ளது. இதனையடுத்து ‘ரஷ் ஹவர்’ எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 20.2% சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. புதுச்சேரியில் ‘ரஷ் ஹவர்’ நேரங்களில் 13.2% நடந்துள்ளதாக இந்த நிறுவனம் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |