இந்தோனேசியாவில் இரு சமூகத்திற்கு இடையேயான சண்டையில் 19 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் உள்ள சோரோங் நகரில் இரவு விடுதி ஒன்றில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர சண்டையில் 19 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து பப்புவா மாகாணத்தின் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.