தெற்கு ஸ்பெயினில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு ஸ்பெயின் நாட்டில் மார்புல்லா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள திறந்தவெளி இரவு விடுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, “துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பல கத்திக் காயங்களுடன் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனையில் காவல்துறையினரின் பாதுகாப்பில் உள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் இருந்ததாக கூறப்படும் 26 வயதுடைய மற்றொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு எந்த காரணத்திற்காக நடைபெற்றது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என அவர் கூறியுள்ளனர்.