Categories
தேசிய செய்திகள்

இரவு விருந்து…. இளம் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்….. உச்சகட்ட அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசிபாத் மாவட்டத்தில் உள்ள மோடி என்ற நகரில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 19 வயது இளம்பெண்ணை 3 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அந்த இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை யாரோ கொடுத்துள்ளனர்.

அதனால் மயக்கம் அடைந்த அந்த பெண்ணை அறைக்கு தூக்கிச் சென்று மூன்று நபர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றதால் வீட்டிற்கு வந்த சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |