Categories
லைப் ஸ்டைல்

இரவு வெந்நீர் குளியல்… உடலுக்கு மிகவும் நல்லது…!!!

வெந்நீரில் குளிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து கொழுப்பு கரையும் என்பதால் இரவு தூங்கும் முன் குளிப்பது நல்லது.

உலகில் உள்ள பெரும்பாலான மனிதர்கள் சாதாரண நீரில் குளிப்பதை விட வெந்நீரில் தான் அதிகமாக குளிக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. வெந்நீரில் குளிப்பதால் உடல் இதமாக இருக்கும் என்றும் உடல் சோர்வு தீர்ந்து விடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். உடம்பு வலி, உறக்கமின்மை என்றால் இரவு தூங்கும் முன்பு வெந்நீரில் குளித்தால் நல்லது.

இதையும் தாண்டி வெந்நீரில் குளிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும், கொழுப்பும் கரையும். இதுதவிர வெந்நீர் குளியல் சரும அழுக்குகள், நச்சுகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேறும். வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பிசுபிசுப்பு தேக்கி வைத்து சருமத்தை வறட்சி அடைய வைக்காமல் பாதுகாக்கும். அதனால் வெந்நீரில்  குளிப்பது  உடலுக்கு மிகவும் நல்லது.

Categories

Tech |