இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் 28 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் போன்ற அனைத்தும் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இன்று முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்படுகின்றது. அண்ணாசாலை, கோயம்பேடு 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று இரவு போலீசார் தீவிர சோதனை நடத்த உள்ளனர்.