பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணம் மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன் என்று திமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் இரவு 12.15 மணி அளவில் திடீர் சந்திப்பாக அமைச்சர் பி டி ஆர் ஐ சந்தித்த டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், நான் பாஜகவில் தொடர போவதில்லை. பாஜகவினரின் மதவெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. தூக்கம் வராத காரணத்தால் நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். பாஜகவில் இருந்து விலகுவதற்கு காலையில் ராஜினாமா கடிதம் எழுத உள்ளேன் என பேட்டி அளித்துள்ளார்.