நடிகை மனவா நாயக் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 8 மணியளவில் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை மனவா நாயக் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துள்ளார். ஆனால், கார் ஓட்டுனர் நடிகை மனவா மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டியுள்ளார். 500 ரூபாய் அபராதம் நீங்கள் கொடுப்பீர்களா? கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகையை மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை மனவா, காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை வேகமாக இயக்கிய ஓட்டுனர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, வாடகை கார் நிறுவன செயலியில் இது குறித்து நடிகை புகாரை பதிவு செய்துள்ளார்.