நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி ஆகும். இதனால் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தடுப்பூசி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள்என பலரும் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல சின்னத்திரை நகைச்சுவையாளர் மதுரை முத்து கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை மதுரை இராஜாஜி மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.