வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.