தந்தை ஒருவர் தன் மகன் ராணுவ வீரனாக வந்து நின்றவுடன் கண்கலங்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
இந்த திருக்குறள் தன் பிள்ளைகள் ஏதேனும் ஒன்றை சாதிக்கும் சமயத்தில், தாய் (பெற்றோர்) பெருமைப்படுவதை உணர்த்தக் கூடியது. தமிழர்கள் அனைவருமே இதை நன்கு அறிவார்கள். ஆனால் வெளிநாட்டு தந்தை ஒருவர் இந்த குரலை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதனை மெய்ப்பித்துள்ளார் .
வெளிநாட்டில் Fisher, என்ற நபர் தன் மகன் ராணுவ வீரனாக முன் வந்து நின்றவுடன் கண்கலங்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது, நீ பிறந்த நாளிலிருந்து உன் வளர்ச்சியை கண்டு வருகிறேன். என்றுமே, நீ மரியாதையுள்ள குழந்தை, உன் தந்தை மற்றும் தாயிடமும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வாய்.
மரியாதையின் ஒரு அடையாளம் தான் சல்யூட். உன் முதல் சல்யூட்டை நான் செலுத்துகிறேன். உனக்கு மரியாதை செலுத்துவதை பாக்கியமாக எண்ணுகிறேன் என்று கூறிவிட்டு கண் கலங்குகிறார். அதனைத்தொடர்ந்து தன் மகனுக்கு கம்பீரத்துடன் சல்யூட் செய்கிறார். இதனால் நெகிழ்ந்த அவரது மகனும் கம்பீரமாக தந்தைக்கு சல்யூட் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் காணும் சிலர் தன்னை அறியாமல் கண் கலங்கிவிட்டோம் என்று கூறுகிறார்கள்.