கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இணைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) மக்களுக்கு மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு முன்னுதாரணமான உத்தரவுகளை பிறப்பித்து வருவது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என எச்சரித்துள்ள எஸ்பி வருண்குமார் நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மொபைல் நம்பரை பகிர்ந்துள்ளார்.
மீறி பொதுமக்களை நிறுவனங்கள் கட்டாயப்படுத்தினால் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது.