இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் பாடல்களின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதை தொடர்ந்து இவர் சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அரிசில் மூர்த்தி எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து மிதுன் மாணிக்கம், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் பாடல்களின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.