Categories
தேசிய செய்திகள்

இராவணன் நாடு சூப்பர்…! ராமன் நாடு வேஸ்ட்…. பாஜக மூத்த தலைவர் பரபரப்பு …!!

மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரியால் பெட்ரோல் விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை 100யை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்விட்டரில், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை 93 என்றும், சீதா பிறந்த நேபாளத்தில் பெட்ரோல் விலை 53 என்றும், இராவணன் ஆண்ட இலங்கை யில் பெட்ரோல் விலை 51 என்றும் பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்து கொண்டு இவரே பெட்ரோல் விலை உயர்வை எடுத்துக்காட்டுடன் சுட்டிக்காட்டியுள்ளது, கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |