Categories
தேசிய செய்திகள்

இரிடியதிற்கு பதில் செம்புகுடம்…. “திருடிய நபர்களுடன் சேர்த்து புகார் அளித்தவரும் கைது”…. அப்படி என்ன நடந்துச்சு…..!!!

இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை திருடி சென்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ததாக எனும் வாஸ்துசாலா நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதியினர். தங்கள் வீட்டில் காரில் வந்த மூன்று நபர்கள் ஒரு லட்சம் ரூபாய், பணம் மற்றும் நகை போன்றவற்றை திருடிச் சென்றதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ். ஐ. வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து  கொள்ளையர்களை தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று  ஓசூரில் வாகன சோதனையின் போதுகொள்ளையர்கள்  மூன்று பேரும் சிக்கினர். மேலும்  அவர்கள் மீது புகார் அளித்த தம்பதியினரை  போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ தேவி சிவசங்கர் தம்பதியினர் தங்கள் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு தகவல் அளித்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம்(39), அரூரை சேர்ந்த வல்லரசு(23), இளைய பிரபு(39), இவர்கள் 3 பேரும்  தம்பதிகள் இரிடியம் என வைத்திருந்த செம்பு குடத்தை பறித்து விட்டனர். ஆனால் நகை, பணம் திருடியதாக தம்பதியினர் பொய் புகார் அளித்தது தெரியவந்தத்து. மேலும் அவர்களிடமிருந்து குடம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டி அளித்த போது டிஎஸ்பி சிவலிங்கம் இரிடியம் என கூறி வருபவர்களிடம் பொதுமக்களை ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொய்யாக புகாரளிப்பர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Categories

Tech |