Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பல்”…. போலீசார் வலைவீச்சு…!!!!

இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் கொண்டமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலைகளை செய்து வருகின்ற நிலையில் இவரிடம் 4 பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் இது மற்றவர்களும் ஒரு கோடிக்கு உங்களுக்கு 30 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் கோவைக்கு 30 லட்சத்துடன் வந்துள்ளார். அப்போது அந்த கும்பல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாஜிக்கு வருமாறு கூறி அதைத் தொடர்ந்து அவர் அங்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று 30 லட்சத்தை கொடுத்து இரிடியத்தை வாங்கியுள்ளார். அவர்கள் இரிடியத்தை வீட்டுக்கு போய் பார்க்குமாறு சொல்லியுள்ளார்கள். இடையில் எங்காவது இரிடியத்தை திறந்து பார்த்தால் போலீஸ் பிடித்துக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்கள். இதனால் அவர் பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போய் பையை பார்த்த பொழுது உள்ளே செங்கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதுபற்றி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றார்கள். இதில் 2 பேர் பிடிபட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |