Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இரிடியம் வேண்டுமா உங்களுக்கு” தொழிலதிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்….!!

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தவல்லி பகுதியில் தொழிலதிபரான ராஜிவ்காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ்  என்பவர் ராஜீவ்காந்தியிடம்  நான் இரிடியம்  வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜீவ்காந்தி பலரிடம் இருந்து வாங்கிய  3 1/2 கோடி ரூபாய் பணத்தை மோகன்தாஸிடம்  வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட மோகன்தாஸ் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜீவ் காந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் ராஜீவ்காந்திக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜீவ்காந்தி கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை  முயன்றுள்ளார் . இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராஜீவ்காந்தியை  அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜீவ்காந்தியின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு பால்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து ராஜீவ்காந்தியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |