யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகின்றது. இன்றுவரை கார்களில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை இரு சக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான புரோடோடைப் இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட உள்ளது.
இந்த மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஃப் சாம்பியன்ஷிப் தொடரில் பயன்படுத்தப்பட உள்ளது. மூன்று வழிகளில் இந்த எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் இயங்குகின்றது. மோட்டார் சைக்கிளின் போது ஏற்படும் ஒட்டுமொத்த சோர்வை போக்குவதற்காக இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நம்முடைய பயன்பாட்டிற்கு வர மேலும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை ஆகும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.