இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பனங்குடி பகுதியில் சரத் மோகன் என்ற கொத்தனார் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயத்தில் மூலமங்கலம் பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில் முருகன் ஆகிய இருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூலமங்கலம் பகுதியில் உள்ள சட்ரஸ் அருகே 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சரத் மோகன், பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில் முருகன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சரத் மோகன், செந்தில் முருகன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பாலசுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.