இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கண்டியன் கடலி கிராமத்தில் லூர்துசேவியர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் செம்பனார்கோவிலை நோக்கி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே லூர்துசேவியர் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென வலப்புறமாக திரும்பியுள்ளது.
இதனை கவனிக்காமல் லூர்துசேவியர் அந்த இரு சக்கர வாகனம் மீது வேகமாக மோதி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த லூர்துசேவியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசேவியர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தப்பியோடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.