இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மாற்றும் இதில் எது குறைவோ அத்தொகை, மான்யமாக வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆகவே இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு விருததுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்நது முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பினராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்டு குழு ஒன்றை அமைத்துள்ளதாக,மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.