திருப்பரங்குன்றம் அருகே சாலையில் ஏற்பட்ட விபத்தால் கணவர் மற்றும் குழந்தைகள் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் இருக்கின்ற அனுமார் கோவில் பகுதியில் ராஜ்குமார் மற்றும் கார்த்திகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வெண்ணிலா என்ற 2 வயது பெண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே சுருளி ராஜன் என்பவர் விருதுநகரில் இருந்து மதுரை அழகர் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். அதில் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அச்சமயத்தில் கப்பல் ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகா தேவி மீது பயங்கரமாக மோதியது. அதனால் கணவர் மற்றும் குழந்தைகள் கண் முன்னே கார்த்திகா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.