மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மின்வாரிய ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள வடகரையாத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவர் தனது மகன் சுஜன் உடன் சாணார்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த இரு சக்கர வாகனத்தை சுஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஆனங்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அப்போது அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கனகராஜ் கை மீது ஏறியுள்ளது.
இந்த விபத்தில் தந்தை மகன் இருவருமே படுகாயம் அடைத்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கனகராஜ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்துள்ளார். தற்போது சுஜனுக்கு ஈரோடு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.