Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி.

இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து விஜயமாலினி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் விஜயமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து  காவல்துறையினர் இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |