இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு பகுதியிலுள்ள ஏடி காலனியை சேர்ந்தவர் 77 வயதான ராமையா. இவர் அப்பகுதியிலுள்ள ராஜ்குமார் என்ற நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வெட்டன் விடுதிக்கு சென்றுள்ளார்.
இவர் வெட்டன் விடுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் கீழே விழுந்ததில் ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து வடகாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்ற காரின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.