Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள முகமதியாபுரத்தில் ரஜினி மஸ்தான் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ஆசிக் அலி தனது நண்பரான முகமது உவைஸ் உடன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பேரும் தங்களது இரு சக்கர வாகனங்களில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது நாவினிபட்டி நான்கு வழி சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர்களின் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து முகமது ஆசிக் அலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நபரான முகமது உவைஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |