கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மதுமிதா கல்லடை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல மதுமிதா இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுப்பட்டியில் இருந்து குரும்பபட்டி சாலையில் சென்றபோது பின்னால் செல்வம் என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த மதுமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மதுமிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.