Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. ஹெல்மெட் சரியாக அணியாததால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

அப்போது ஹெல்மெட் சரியாக அணியாததால் கார் மோதிய வேகத்தில் தலையில் இருந்த ஹெல்மெட் தனியாக கழன்றது. இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஏஞ்சலின் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த போலீசார் கார் டிரைவர் சரத்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Categories

Tech |