இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தில் மீன்பிடி தொழிலாளியான செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தற்காஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி செல்வமணி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.
இதில் செல்வமணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக செல்வமணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.