இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டீ மாஸ்டரான இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பூர்ணம் அவரது உறவினர் சிவலிங்கம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் எருமப்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அலங்காநத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இந்த விபத்தில் சம்பூர்ணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிவலிங்கம் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மோசம் சிவலிங்கத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.