இருதரப்பினரும் மோதி கொண்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் மாதப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாதப்பாவின் உறவினர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் படுகாயமடைந்த மாதப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாதப்பா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திரன், முத்து, லிங்கப்பா, சிவண்ணா, பச்சையப்பா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.