உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவன் லீவு வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தலைமையாசிரியரும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு தற்போது அளவே இல்லாமல் போயுள்ளது. மாணவர்கள் செய்யும் குறும்புத்தனம் அத்தனையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது . தற்போது ஒரு விடுப்பு கடிதம் வைரலாகி வருகிறது. அப்படி அவர் அந்த விடுப்பு கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்பதை இது தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லாத மாணவர்கள் பல காரணங்களை கூறி கடிதம் எழுதுவார்கள். ஆனால் இங்கு ஒரு மாணவன் நான் இறந்து விட்டேன். அதனால் எனக்கு ஒரு அரை நாள் விடுப்பு வேண்டும் என்று காரணம் சொன்னது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியரும் அந்த மாணவனுக்கு விடுப்பு வழங்கி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த கடிதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த விண்ணப்பத்தில் மாணவன் எழுதியிருந்தது என்னவென்றால் “விண்ணப்பதாரர் இன்று 20 ஆகஸ்ட் 2019 ஆம் அன்று பத்து மணி அளவில் காலமானார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே விண்ணப்பதாரருக்கு தயவுகூர்ந்து அரை நாள் விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த மாணவன் தனக்கு தானே இறந்து விட்டதாக கூறி கடிதம் எழுதி இருந்தாலும், அதற்கு சிவப்பு பேனாவால் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டு விடுப்பு அளித்துள்ளார் என்பதுதான் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த பதிவானது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.