தேனியில் மனைவியை கற்களால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு உள்ளார். இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை கற்களால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மஞ்சு கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.