Categories
சினிமா தமிழ் சினிமா

‘இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கே’… கலாய்த்த ரியோ… பதிலடி கொடுத்த கேபி…!!!

பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவின் புகைப்படத்தை ரியோ ராஜ் கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட கேபி பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கேபி கிழிந்த ஜீன்ஸ் மற்றும் வித்தியாசமான டாப்ஸ் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் பிரபலமும் கேபியின் நண்பருமான ரியோ ராஜ் ‘இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கே’ என கலாய்த்து பதிவிட்டுள்ளார். மேலும் சில ரசிகர்கள் ‘எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல கேபி’ என்றெல்லாம் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் கேபியின் இந்த புகைப்படத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆமா கிழிஞ்ச பேண்ட் தான். காசு இருந்தா வாங்கி கொடுங்கப்பா’ என கேபி பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |