Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருந்த ஆதாரமும் போச்சு… அதையும் விட்டு வைக்கல… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடை முழு ஊரடங்கு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, கடையின் ஷட்டர் கதவையும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துவிட்டு மர்ம நபர்கள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் அங்கிருந்த 90 ஆயிரத்து 660 ரூபாய் மதிப்புள்ள கண்காணிப்பு கேமராக்களை முற்றிலும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |