Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தால் 18 குழந்தைகள் மரணம்…. உஸ்பெகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup இன்று இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்கள் மருந்தகத்தில் வாங்கி இருக்கலாம் அல்லது மருந்தகத்தின் பரிந்துரையின் படி பெற்றோர்கள் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரியோன் பயோ டெக் நிறுவனம் அந்த இருமல் மருந்தை சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த மருந்தை குடித்த  18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டில் மாரியோன் பயோ டெக் நிறுவனத்தின் இருமல் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்த குற்றத்திற்காக 7 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகளும் சேர்ந்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |