இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பெற்றோர்கள் அல்லது பார்மாஸ்டுகளின் அறிவுத்தலின்படி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது . இந்நிலையில் 18 குழந்தைகளின் உயிரிழப்பை தொடர்ந்து டாக் -1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் அனைத்தும் பார்மசிக்களில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.