ஸ்கூட்டர் இரும்பு கம்பத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சபரி மற்றும் தனது தங்கை மகனான பிரவீன் ஆகியோருடன் ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய ஸ்கூட்டர் சாலையோரம் இருந்த இரும்பு கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மற்ற 2 சிறுவர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.