ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஒரு கும்பல் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியில் இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோவில் தாக்கப்படும் நபரையும், அவரது தந்தையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தன் மகன் பயந்துகொண்டு இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான் என்று அவரது தந்தை தெரிவித்தார்.
தனது மகனை 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கடத்தி சென்ற 4 மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி அதுமட்டுமின்றி சிறுநீரை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதும் அவர் தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.