Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இரும்பு கூடாரம் அமைக்க இட வசதி வேண்டும்”… கலெக்டரிடம் மனு அளித்த மண்பாண்ட தொழிலாளர்கள்…!!!!!!

விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைமகள் சுடுமண் சிற்ப குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறோம். இதில்  91 பேர் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் நாங்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைத்து சூலை போட்டு வேகவைப்பதற்கு போதிய இடவசதி இல்லை.

அதனால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இரும்பு கூடாரம் அமைத்து தருமாறு விண்ணப்பம் கோரினோம். இதனையடுத்து  நாங்கள் கேட்டுக் கொண்டபடியே இரும்பு கூடாரம் அனுமதிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. மேலும் அதற்கான இடத்தை எங்களுக்கு தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |