சாமை கூட்டுச்சோறு செய்ய தேவையான பொருட்கள்:
சாமை அரிசி -1 கப்
நெய் -3 மேசைக்கரண்டி
இஞ்சிப்பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பட்டை, சோம்பு – அரை தேக்கரண்டி
புதினா – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 3 எண்ணிக்கை
மஞ்சள்த்தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
நறுக்கிய காய்கறிகள் – 1 கப் நறுக்கிய வெங்காயம் -கால் கப்
தக்காளி – கால் கப்
தயிர் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு தண்ணீர் -2கப்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், 3 ஏலக்காய், அரை தேக்கரண்டி பட்டை, சோம்பு பொடி 1/2 தேக்கரண்டி, இஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி, புதினா 1/2 தேக்கரண்டி, வெங்காயம், தக்காளி என அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியபின் அதனுடன் நறுக்கிய காய்கறிகள் 1 கப் மற்றும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக விடவும்.
அதனை தொடர்ந்து சுத்தம் செய்த சாமை அரிசி 2 கப், இரண்டு பங்கு நீர் சேர்த்து வேக வைத்து எடுத்தால் அருமையான சாமை கூட்டுச் சோறு ரெடி.