Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரும்பு சத்து மிகுந்த… முருங்கைக்கீரை அடை …!!!

முருங்கைக்கீரை அடை செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி                                       – அரை உழக்கு,
புழுங்கல் அரிசி                      – அரை உழக்கு,
துவரம்பருப்பு                          – அரை உழக்கு,
கறிவேப்பிலை                       – சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்),
மல்லித்தழை                          – சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்),
முருங்கைக்கீரை                  – சிறிதளவு (ஆய்ந்து கொள்ளவும்),
பெருங்காயம்                          – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு                   – தேவையான அளவு.
கடலைப்பருப்பு                      – அரை உழக்கு,
உளுத்தம்பருப்பு                    – அரை உழக்கு,
காய்ந்த மிளகாய்                   – 12,
சோம்பு                                        – 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல்             – ஒரு கப்,
வெங்காயம்                             – 3  (நறுக்கியது)

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊறிய அரிசி, பருப்புகளுடன் காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

அதனுடன் வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயம், முருங்கைக்கீரை, உப்பு, தேங்காய்த்துருவல் என அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கி கொள்ளவும்.

பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, அதன்மேல் எண்ணெய் விட்டு நன்றாகச் சிவந்த பின் எடுத்துப் பரிமாறினால் சுவையான முருங்கைக்கீரை அடை தயார்.

Categories

Tech |